LOADING

Type to search

சினிமா

டி.டி.எப்.வாசன் படத்தில் இணைந்த கூல் சுரேஷ்

Share

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது.

இதையடுத்து இப்படத்தின் முதல்காட்சி பதாகை டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான நேற்று வெளியானது. ‘மஞ்சள் வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல இடம்பெற்றுள்ளது. மேலும் முதல் தோற்ற பதாகையில் ‘299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார்.