LOADING

Type to search

சினிமா

முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவி மாமன்னன் – மாரி செல்வராஜ் பதில்

Share

வடிவேலுவின் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலினை ஒத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மாமன்னன் திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலினிடம், படத்தில் சமூகநீதி இருந்தாலும், நிஜத்தில் வேங்கைவயல் சம்பவம் போல் நடப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, மக்கள் தான் மாறவேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் திரைப்படம் இன்னும் பல நல்ல முன்னெடுப்புகளுக்கு தொடக்கமாக அமையும் என தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையைத் தழுவி மாமன்னன் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், அதனை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலினை ஒத்திருப்பதாக ஏற்கனவே திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.