தெலங்கானா தச்சுத் தொழிலாளி மணல் சிற்ப கலைஞர்
Share
தெலுங்கானாவைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி ஒருவர் மணல் கலைஞராக அசத்தி வருகிறார்.
தெலுங்கானாவின் பெத்தபள்ளியை சேர்ந்த ராவெல்லி ஷங்கர், கண்கவரும் தனது அற்புதமான படைப்புகளால் மணல் கலை ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார். ராவெல்லி ஷங்ரின் கலை பயணமானது முதன் முதலில் கார்பென்ட்டர் வேலையில் இருந்து தான் தொடங்கியது. ஏனென்றால் இவரது தந்தை ஒரு கார்பென்டர் ஆவார். சிறு வயது முதலே தனது தந்தையுடன் இணைந்து கார்பென்ட்டரி வேலைகளை கற்று கொண்ட ராவெல்லி ஷங்கர், நாளாக இந்த வேலையில் மிகுந்த ஈடுபாடு காட்டி தனது தச்சு கலை மூலம் மர கதவுகளை அற்புதமாக வடிவமைப்பதன் மூலம் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தினார்.
தச்சுத் தொழில் நன்றாக போய் கொண்டிருந்த சமயத்தில் கால மாற்றம் காரணமாக தச்சுத் தொழிலானது இயந்திரமயமாக்கல் காரணமாக பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இவரது வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தல் உண்டானது. எனினும் சூழலை கண்டு கவலைப்படாமல் ஷங்கர் தொடர்ந்து தனது கைவினைப்பொருள் தயாரிக்கும் திறமையை வளர்த்து கொண்டே இருந்தார். இதற்காக புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டார், இடைவிடாமல் பயிற்சி செய்தார். தனது புதிய கலை முயற்சிகளின் ஒருபகுதியாக கார்ன்ஃப்ளேக் மாவை பயன்படுத்தி இவர் செதுக்கிய விநாயக பெருமானின் சிலை, இவரது வாழ்வின் திருப்புமுனை தருணத்தை ஏற்படுத்தியது.
இந்த வித்தியாசமான விநாயகர் சிலை காரணமாக பெத்தப்பள்ளியில் இவரது புகழ் பரவியது. பலரும் நேரில் வந்து பார்த்து பாராட்டி விட்டு சென்றனர். கார்ன்ஃப்ளேக் விநாயகர் சிலைக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அங்கீகாரத்தால் உற்சாகமடைந்த ஷங்கர், முறையான பயிற்சி இல்லாத போதும் மணல் சிற்பங்கள் மீது ஆர்வம் செலுத்த துவங்கினர். மணல் சிற்ப கலையில் சுமார் 2 வருடம் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து பயிற்சி பெற்ற பிறகு மணல் கலை மீதான ஆர்வம் ஷங்கருக்கு பலனளிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து பதுகம்மா, தெலுங்கானா தாலி, ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவி, அம்பேத்கர், கே.சி.ஆர், மோடி, சிவலிங்கங்கள், சிவன், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் என இவரது மணல் சிற்ப படைப்புகள் நீண்டு கொண்டே சென்றதோடு, இவரது மணல் கலை படைப்புகள் மக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாரட்டிகளை பெற்று வந்தன.
இதனை தொடர்ந்து முன்பு கார்பென்டராக இருந்த ஷங்கர் தற்போது நாட்டின் முன்னணி மணல் சிற்ப கலைஞரில் ஒருவராக இருக்கிறார். தனது மணல் சிற்ப கலை குறித்து பேசி இருக்கும் ஷங்கர், “சமீபத்தில் ஒடிசாவில் நடந்த சர்வதேச மணல் கலை விழாவில், சர்வதேச மணல் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக்கிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது, எனது கலை வாழ்க்கையின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த பாராட்டுச் சான்றிதழ் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச மணல் கலை விழாவில் பங்கேற்க தற்போது பயிற்சிகள் எடுத்து வருகிறேன்” என்றார்.













