ஜூன் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 74 லட்சம் பேர் பயணம்
Share
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் 72 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 28-ந்தேதி மட்டும் 2 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களில் பயணிகளுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் டிக்கெட் (8300086000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.













