LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம்

Share

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 28 பொருட்களை ஒப்படைக்கக் கோரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்தில் விட கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி நியமிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா வாங்கியிருந்த தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள் மற்றும் பல வண்ண கற்கள் என 30 கிலோ நகைகள் தவிர்த்து தங்களிடம் மற்றவை எதுவும் இல்லை என்று கர்நாடக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த 30 கிலோ ஆபரணங்கள் கருவூலத்தில் இருப்பதாக கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த 28 பொருட்களை, கர்நாடக கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.