LOADING

Type to search

சினிமா

இறுதிக்கட்டத்தை நெருங்கிய விக்ரமின் ‘தங்கலான்’

Share

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

‘கங்குவா’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி அன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளுடன் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன்படி, பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிகமான நாட்கள் தேவைப்படுவதால் வரும் தமிழ் புத்தாண்டுக்கு அதாவது ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விக்ரம் மற்றும் பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்திருந்தார். தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும், இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.