LOADING

Type to search

சினிமா

லியோ’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் இயக்குநர்?

Share

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது. இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. .