மீண்டும் வெளியாகும் ஆர்யாவின் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
Share
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் வரும் ஜூலை 7-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
காதல் மற்றும் காதல் திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்யா, முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஆர்யாவின் 34வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ளார். பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் இப்படம் வரும் ஜூலை 7-ஆம் தேதி ஜி5 ஓடிடித்தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













