LOADING

Type to search

இந்திய அரசியல்

தேவிபட்டினத்தில் பெண்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Share

தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதில் தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தேவிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி மதிவதனா தலைமை உரையாற்றி சமூகநல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம் என்பதனை எடுத்துரைத்தார் சமூக நலன் அலுவலர் மதிவதனா.