LOADING

Type to search

இந்திய அரசியல்

மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Share

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்அமைச்சருமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்வதாக டில்லி முதல்-அமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில் கூறி இருப்பதாவது: மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.