LOADING

Type to search

இந்திய அரசியல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்ட செயல்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்

Share

திருவள்ளூர் மாவட்டத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்ட செயல்பாடு குறித்து அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து ருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மாவட்ட அளவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.