LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரள அரசு பஸ்சில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர் கைது

Share

திருவனந்தபுரத்தில் இருந்து மலப்புரத்திற்கு கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதில் நையாற்றின்கரையை சேர்ந்த ஜஸ்டின்(வயது 42) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ் திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை அடைந்தபோது 49 வயதான பெண் ஏறினார். இவர் ஆலுவா பகுதிக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்தார்.

அந்த பெண் இருக்கையில் அமர்ந்திருந்த போது, அது முன்பதிவு செய்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தன்னுடைய இருக்கைக்கு அருகே வந்த அமருமாறும் கண்டக்டர் ஜஸ்டின் கூறியுள்ளார்.

இதனால் அந்த பெண்ணும் வேறு வழியின்றி கண்டக்டருக்கு அருகே சென்று அமர்ந்துள்ளார். இரவில் பஸ்சில் விளக்குகள் அனைக்கப்பட்ட பின்னர் கண்டக்டர் ஜஸ்டின் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வேறு இருக்கைக்கு சென்று அமர முயன்றார். ஆனாலும், கண்டக்டர் ஜஸ்டின் அவரை செல்ல விடாமல் தடுத்தார்.

மீண்டும் அந்த பெண்ணிடம் பாலியல்
சீண்டலை தொடர்ந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நைசாக தனது செல்போன் மூலம் கேரளா அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலுவா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த பஸ் ஆலுவா நிலையத்தை அடைந்தவுடன் அங்கு தயாராக காத்திருந்த போலீசார் விரைந்து சென்று கண்டக்டர் ஜஸ்டினை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.