LOADING

Type to search

இந்திய அரசியல்

மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சித்தேர்தல்: மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் முன்னிலை

Share

மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத், 9,730 பஞ்சாயத்து சமிதி, 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பெரும் வன்முறையில் 20பேர் பலியான இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 11) காலை தொடங்கியது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துக்கான இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3,068 இடங்களிலும், பாஜக 1,151 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 460 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 168 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் 28 கிராம சமிதி இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தற்போது முன்னிலை நிலவரம் மட்டுமே வந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிய இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.