LOADING

Type to search

இந்திய அரசியல்

கணவர் மற்றும் மகளுடன் ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் எடுத்த விபரீத முடிவு!

Share

ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலரொவர், தனது கணவர் மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த தேவிபிரியா (35) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் அருள்லால் (50) ராசிபுரம் கடை வீதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிகாஸ்ரீ (18) 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் வீடு காலை வெகு நேரமாக திறக்கப்படாததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது அருள்லால் மற்றும் அவரது மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தத்தை அறிந்துள்ளனர்.

இதையடுத்து ராசிபுரம் காவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர், உள்ளே சென்று பார்த்ததில் இவர்களுடன் அவர்களின் மகள் மோனிகாஸ்ரீயும் தற்கொலை செய்ததை அறிந்துள்ளனர். இதனை அடுத்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறை, பிரேத பரிசோதனைக்காக அவற்றை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை காரணம் குறித்து ராசிபுரம் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளனரா எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.