LOADING

Type to search

சினிமா

“என் கனவு வாழ்க்கையை வாழ்வதாக நினைக்கிறேன்”- ஜவான் குறித்து நெகிழ்ந்த இயக்குநர் அட்லீ!

Share

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதிவுக்கு, இயக்குநர் அட்லீ தன்னுடைய பக்கத்தில் நன்றி தெரிவித்து நெகிழ்ந்துள்ளார். ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லீ, பின்னர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றிப் படங்களைத் தந்ததையடுத்து, தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் அறிமுக படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. முன்னோட்ட காணொளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுகுறித்து ஷாருக்கான் பதிவிட்டிருந்தார். அதில் அட்லீக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ஷாருக். அதற்கு அட்லீயும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “அரசர்களின் கதைகளைப் படித்ததில் இருந்து நிஜ வாழ்க்கையில் அப்படியான ஒருவருடனேயே பயணித்தது என்பதை, என் கனவு வாழ்க்கையை நிஜத்தில் நான் வாழ்கிறேன் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் என்னுடைய வரம்புகளுக்கு மீறி என்னை செயல்பட வைத்தது. அப்படி செயல்பட்டதிலிருந்து விலை மதிப்பற்ற பாடங்களை நான் கற்றுக்கொண்டேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.