‘நானி 30’ தலைப்பில் காணொளி வெளியிடும் படக்குழு
Share
தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில் நானியின் 30வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நானி 30 படத்தின் தலைப்பு அறிவிப்பு காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் சவுரவ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.













