திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் திடீர் ஆய்வு
Share
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாதாந்திர வாகன ஆய்வு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட வாகனங்களை மாதம்தோறும் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாதாந்திர வாகன ஆய்வு நடைபெற்றது. இதில் காவல்துறையினர் பயன்படுத்தும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றியும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல் மற்றும் மணல் கடத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது குறித்து விவரிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் மற்றும் குற்றவாளிகளை கைது செய்வது குறித்து ஆலோசனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.













