LOADING

Type to search

இந்திய அரசியல்

நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை

Share

நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் இங்கு கடந்த பல ஆண்டுகளாக யானை வளர்க்கப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் கோவில் யானைக்கு அம்பாளின் பெயரான காந்திமதி என்ற பெயரிடப்பட்டுள்ளது காந்திமதி யானை தற்போது 55 வயதை கடந்த நிலையில் சமீபத்தில் உடல் பருமன் அதிகரித்து காணப்பட்டதால் கோவில் சார்பில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து காந்திமதி யானை நடைப்பயிற்சி மேற்கொண்டது இருப்பினும் வயது முதிர்வு காரணமாக யானை எதிர்பார்த்த அளவுக்கு உடல் பருமனை குறைக்க முடியவில்லை. இருப்பினும் தற்போது யானையின் உடல்நிலையை பாகன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் இது போன்ற நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட வளர்ப்பு யானைகள் கண்காணிப்புக் குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி யானையின் உடல் நலம் குறித்து

திடீர் பரிசோதனை செய்தனர்.

மூத்த கால்நடை மருத்துவர் கலைவாணன் யானையின் ரத்த மதிரிகளை சேகரித்தார். அதில் யானையின் குளுக்கோஸ் அளவு, உப்பின் அளவு உள்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதே போல் யானையின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

தொடர்ந்து யானையின் உண்ணும் திறன் ஒலி எழுப்பும் திறன், உடல் எடை, யானை பாகன் சொல்வதை யானை கேட்கிறதா என்பதை குறித்து இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து குழு தலைவர் ஷியாம் கூறும்போது, காந்திமதி யானையின் காலில் லேசான காயம் இருந்தது. தற்போது யானை நலமாக இருக்கிறது யானை இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. யானையின் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த மாதிரி ஆய்வு முடிவுக்கு பிறகு தேவைப்படும் பட்சத்தில் யானைக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.