சிம்பு தேவன் – யோகி பாபு இணையும் படம்
Share
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்பு தேவன். விஜய்யை வைத்து இவர் இயக்கிய புலி படம் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் இயக்கிய கசட தபற என்ற படம் வெளியாகி அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. இடையில் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கிவந்தார்.
ஆனால் வடிவேலு ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்தப் படம் பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கிவந்தார். இந்தப் படம் முழுக்க கடலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. போட் – நெய்தல் கதை என்ற பெயரில் இந்தப் படம் உருவாகிவருகிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.













