LOADING

Type to search

இந்திய அரசியல்

உத்திரமேரூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் ஏரிக்குள் கவிழ்ந்தது – 11 பேர் மீட்பு

Share

உத்திரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சீத்தனக்காவூர் பகுதியில் இருந்து படப்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் வேனில் பணிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் காலை 7 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் வேலைக்காக வேனில் சென்றனர். வேனை ஓட்டுநர் சிவானந்தம் என்பவர் ஓட்டினார். சாலவாக்கம் அருகே பொற்பந்தல் ஏரிக்கரையோரம் சென்று கொண்டு இருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

ஏரிக்கரையில் முழங்கால் அளவுக்கு உள்ள தண்ணீரில் வேன் சரிந்து கிடந்ததால் அதில் இருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் கூச்சலிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் மற்றும் கிராமமக்கள் விரைந்து வந்து வேனின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த 5 பெண்கள் உள்பட 11 பேரை பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்த வேகத்தில் தொழிலாளர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சாலவாக்கம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.