கமல்ஹாசன் படத்தை 300 கோடிக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்?
Share
கமல்ஹாசனின் இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனம் 300 கோடி கொடுத்து வாங்கிய செய்தி மலைக்கவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர் கமல் ஹாசனின் படத்திற்கு எப்போதும் உச்சகட்ட எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும். சமீப காலமாக டாப் நடிகர்களின் படத்தை நீ, நான் என போட்டி போட்டு ஓடிடி நிறுவனங்கள் முந்தியடித்துக் கொண்டு வாங்கி வருகின்றனர். அப்படி, நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்து இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் 300 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் படப்பிடிப்பில் உள்ளது, இந்த நிலையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தின் அனைத்து மொழிகளின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளஸ் நிறுவனம் ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல் ஹாசனின் கேஎச் 233 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளஸ் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் உரிமையை ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ள செய்தி ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.













