LOADING

Type to search

சினிமா

விஜய் சேதுபதி பதாகையை வெளியிட்ட ஜவான் படக்குழு

Share

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘ஜவான்’ திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த பதாகையில் “டீலர் ஆஃப் டெத்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.