சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
Share
சென்னையில் மூன்று இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வசித்து வரும் இஸ்மாயில் என்பவரின் அலுவலகம் மற்றும் ஜோதி வெங்கடாசலம் சாலையில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இஸ்மாயில் துடைப்பம் மொத்த வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், புரசைவாக்கம் தாக்கர் தெருவில் வசிக்கும் விடியல் புத்தகத்தின் ஆசிரியர் சையது அபுதாஹிர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக விடியல் புத்தகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில், சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையில் வங்கி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.













