LOADING

Type to search

சினிமா

புதிய பதாகையை வெளியிட்ட கேப்டன் மில்லர் படக்குழு

Share

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் முன்னோட்டம் இன்று(ஜூலை 28ம் தேதி) நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது.