LOADING

Type to search

சினிமா

ஏ.ஆர்.ரகுமானுடன் உலா வரும் கமல்ஹாசன்

Share

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் லோலா விஎஃப்எக்ஸுடன் உருவாகி வருகிறது. இந்தியன் -2 திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து சிம்பு நடிக்கும் 48-வது படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2989 ஏடி’ படத்தின் அறிமுக விழாவிற்காக அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் தனது நாற்பது வருட கால நண்பரும் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞருமான மைக் வெஸ்ட்மோரையும் சந்தித்து உரையாடினார். இந்நிலையில், தற்போது கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஆஸ்கர் மியூசியத்தை பார்வையிட்டுள்ளார்.