கணவரை தீர்த்துக்கட்டிய ஆசிரியை நிவேதா
Share
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் மகன் சுந்தரராஜ் (வயது 32). பி.இ. மெக்கானிக்கல் படித்து விட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிவேதா பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். அவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் சுந்தரராஜ் அவரது வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததாக ஜலகண்டாபுரம் காவல்துறை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை சுந்தரராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுந்தரராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இருந்ததாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பட்ட தகவல் இருந்ததாலும் சுந்தரராஜ் சாவில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரராஜ் மனைவி நிவேதாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவல்துறை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். ஒரு கட்டத்தில் காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ் என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கு மூளையாக நிவேதாவின் தோழி வித்யா இருந்ததும் காவல்துறை விசாரணையில் அம்பலமானது. உடனே காவல்துறை சுந்தரராஜ் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த கொலை தொடர்பாக நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ், தோழி வித்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.













