வலையொளியில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கேப்டன் மில்லர் முன்னோட்டம்
Share
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்டம் தனுஷ் பிறந்த நாளான இன்று நள்ளிரவு வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இந்த முன்னோட்டம் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.













