LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆகஸ்ட் 4ம் திகதி ஈரோடு பெருநகரில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது ‘ஈரோடு புத்தகத் திருவிழா-2023

Share

தமிழ்நாடு அரசின் உதவியோடு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் உவகையும் உற்சாகமும் தரவல்ல உயர்வான விழா

எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி ஈரோடு பெருநகரில் கோலாகலமாக ஆரம்பமாகி 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது ‘ஈரோடு புத்தகத் திருவிழா-2023 என்ற செய்தியை எமது வாசக அன்பர்களோடும் எழுத்தாளப் பெருமக்களோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழ்நாடு அரசின் உதவியோடு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் இந்த உவகையும் உற்சாகமும் தரவல்ல உயர்வான ‘ஈரோடு புத்தகத் திருவிழா-2023 தினமும் காலை 11.00 மணி தொடக்கம் இரவு 9.30 வரை நடைபெற சிறப்பான ஏற்பாடுகளை மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலான குழுவினர் செய்து வருவதாக எமது தமிழ்நாட்டுச் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஈரோடு பெருநகரில் அமைந்துள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள ‘ஈரோடு புத்தகத் திருவிழா-2023 வில் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டின் பல நகரங்களிலிருந்தும் பேச்சாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0424 2269186