LOADING

Type to search

இந்திய அரசியல்

நில அளவிடும் பணிகளை நிறுத்திவிட்டு சென்ற என்.எல்.சி ஊழியர்கள்

Share

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி அதிகாரிகள் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணி நிறுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து என்எல்சி கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 4வது நாளாக என்.எல்.சி கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டது.

அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர் என் நிலத்தை அளவிடு செய்ய நீங்கள் யார், உடனடியாக நிலத்தை விட்டு வெளியேருங்கள் என தராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த பெண் விவசாயி ஒருவர் என்எல்சியின் வாய்க்கால் அமைக்கும் பணியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.