LOADING

Type to search

இந்திய அரசியல்

பணிக்காலத்தில் உயிரிழந்த 61 ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை – முதலமைச்சர் ஆணை வழங்கினார்

Share

பள்ளிக்கல்வித் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலை அளிப்பதற்காக பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் பணிக்காலத்தில் மரணம் அடைந்த பணியாளர்களின் 61 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுவேலை வழங்கப்பட்டது. இதன் அடையாளமாக 4 பேர்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி.ஐ. ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட்போர்டு உள்ளிட்ட ரூ.6.86 கோடி செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ள 303 திறன் வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.