LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு; படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்

Share

கன்னியாகுமரியில் இன்று (ஆக.2) கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படையில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடத்தப்படுகின்றது.

இந்த நிலையில் கடல் நீர் மட்டம் இன்று திடீரென குறைந்தது. இது அடிக்கடி நிகழும் சம்பவம் என்றாலும் நேற்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் படகு துறையில் டிக்கெட் எடுக்க காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீண்ட நேரம் காத்திருப்புக்கு பிறகு கடல் நீர்மட்டம் சீரான நிலைக்கு வந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு படகு சவாரி காலை 10.30

மணியளவில் மீண்டும் தொடங்கியது. நேற்று காலையிலும் (ஆக 1) இதே போல் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டது.