LOADING

Type to search

சினிமா

‘நாதஸ்வரம்’ ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Share

நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஸ்ருதி சண்முகபிரியா. இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. அரவிந்த் சேகர் 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் காணொளியை அரவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவற்றிருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்த நிலையில் அரவிந்த் சேகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இருவருக்கும் திருமணமாகி ஒருவருடமே ஆன நிலையில் அரவிந்த் சேகர் மரணமடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.