LOADING

Type to search

இந்திய அரசியல்

பெண் ஊழியரிடம் நகை பறிப்பு.. வடமாநில கொள்ளையர்கள் கைது

Share

சென்னையில் கண்ணாடி வாங்குவது போல் கடைக்குள் நுழைந்து பெண் ஊழியர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை காவல்துறை கைது செய்தனர்.
சென்னை மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் சந்திப்பு அருகே உள்ள ஆப்டிக்கல்ஸ் (கண்ணாடி( கடையில் பாண்டிசெல்வி என்ற இளம்பெண் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி கடையில் பாண்டிசெல்வி இருந்தபோது கண்ணாடி வாங்குவது போல் வந்த இருவர் பேச்சுக் கொடுத்துக் கொண்டே பாண்டிலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 1½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பாண்டிசெல்வி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். நடந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை ஆதாரமாக கொண்டு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் ஆரம்பித்து செயின் பறிப்பு கொள்ளையர்கள் சென்ற இடமெல்லாம் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், அவர்கள் மேடவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றது தெரியவந்தது. அதன் பிறகு அங்கிருந்து சென்று காஞ்சிபுரம் தனியார் விடுதியில் தங்கிய காட்சிகளை ஆய்வு செய்ததில் தெரியவந்தது. பின்னர் மும்பையில் இருந்து ரயில் மூலம் ஹைதராபாத் சென்று அங்கிருந்து பெங்களூர் ரயில் நிலையம் சென்றதும் தெரியவந்துள்ளது. நகையை பறித்த வடமாநில கொள்ளை கும்பல் இருசக்கர வாகனத்திலும், விமானத்திலும், ரயிலிலும் மாறி மாறி சென்று தப்பித்த நிலையில் தனிப்படை காவல்துறையினர் அவர்களை ஆய்வு செய்துள்ளனர்.