LOADING

Type to search

இந்திய அரசியல்

ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கீடு

Share

ராகுல் காந்திக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி ஆன நிலையில், அவருக்கு மீண்டும் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையின் வீடு ஒதுக்கீடு செய்யும் குழு, துக்ளக் லேனில் ராகுல் வசித்து வந்த பழைய பங்களாவையே அவருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. தனது பழைய வீட்டைத் திரும்ப பெற்ற நிலையில், ‘இந்தியா முழுவதும் என் வீடு’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.4) நிறுத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவரது தகுதி இழப்பு திரும்பப் பெறப்பட்டு, அவர் மீண்டும் எம்பி ஆனார். இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குப் பிறகு, அவை நடவடிக்கைகளில் ராகுல் காந்தி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.