LOADING

Type to search

இந்திய அரசியல்

ரூ.300 கோடி செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்

Share

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் 3-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணியளவில் தொடங்கப்பட்ட விசாரணையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது.

இதனிடையே கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டிவரும் வீட்டில் 2 காரில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். இந்த சொகுசு பங்களா கட்டப்படும் இடமானது அசோக்குமாரின் மனைவி பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது.