LOADING

Type to search

இந்திய அரசியல்

கல்வெட்டு ஆய்வாளர் செ.ராசு காலமானார்

Share

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் கல்வெட்டு ஆய்வாளர் மற்றும் தமிழக அரசின் உ.வே.சா, விருது பெற்ற ஈரோடு பெருந்துறை செ.ராசு, வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது வயது 85.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ள முத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் பிறந்தவர் புலவர் செ.ராசு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கொங்கு நாட்டின் வரலாற்று ஆய்வாளராகவும், கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்றவராகவும் திகழ்ந்தார். இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த செ.ராசு காலமானார்.