LOADING

Type to search

இந்திய அரசியல்

அரசு பள்ளியில் புது எரிவாயு உருளை மாற்றியதும் நேர்ந்த விபத்து

Share

அரசு பள்ளியில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க புதிய எரிவாயு உருளை மாற்றி சமையல் பணி தொடங்கியது. இந்த நிலையில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிவாயு உருளையில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.