ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Share
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இதுவரை ஒரு கோடியே 48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்திற்காக இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இதுவரை ஒரு கோடியே 48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் குறித்தும், பயனாளர்களை முறையாக தேர்வு செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் விரிவான ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. மகளிரின் உரிமைக்காக எண்ணற்ற திட்டங்களைத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரிலான “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”, அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை பதிவு செய்கிற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபடாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் உதயநிதி பதிவிட்டுள்ளார்













