கருவறை படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிப்பு!
Share
கருவறை குறும் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்த கடைசி விவசாயி படம் தேர்வாகியுள்ளது. பிரபலமான மற்றும் அனைத்து விதமான பொழுதுபோக்கை உள்ளடக்கிய படமாக ஆர்.ஆர்.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனும், சிறந்த நடிகைகளாக ஆலியா பட் மற்றும் கிரித்தி சனோனும் தேர்வாகியுள்ளனர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஆர்.ஆர். ஆர். படத்திற்காக கீரவாணிக்கும் வழங்கப்படவுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் பாடிய ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும், ஆர்.ஆர்.ஆர். படத்தில் வெளிவந்த கொமுரம் பீம் பாடலுக்காக கால பைரவாவுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கருவறை குறும் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள கருவறை குறும்படத்தின் இயக்குனர் இவி. கணேஷ் பாபு குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படுகிறது இந்த அவலம் பற்றி கருவறை பேசுகிறது என்று கூறியுள்ளார்.













