LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜி20 விருந்து: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை

Share

ஜி20 மாநாட்டையொட்டி இந்திய அதிபர் திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக அதிபர் மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது. அதிபரின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள். காலை தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேவகவுடா உடல்நலத்தை காரணம் காட்டி பங்கேற்க இயலாது எனக் கூறிவிட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவர் கேபினெட் அமைச்சருக்கு சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினெட் அமைச்சர்கள், மாநில முதல்-அமைச்சர்கள் ஆகியோர் அழைக்கப்படடுள்ளனர். இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகழ்பெற்றவர்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.