தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச போட்டிகள்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்
Share
தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடல் கயாக் சாகச விளையாட்டு போட்டியை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் வைத்து கடல் சாகச விளையாட்டுப் போட்டி இன்று (செப். 8) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டிகளில் 16 -மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 130-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர்கள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடல் சாகச போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த கடல் சாகச விளையாட்டு போட்டிகள் கடலில் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை சென்று வரும் வகையில் நடைபெறுகின்றன. நின்று கொண்டே துடுப்பு செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என தனித் தனிப் பிரிவுகளாக நடத்தப்படுகின்றது.
போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்தோனேசிய தலைநகர் பட்டாயாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கும் பின்னர் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிக்கும் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் , கர்நாடகம் , ஆந்திரா, மத்திய பிரதேஷ், அரியானா, டெல்லி ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கர், உள்ளிட்ட 13 -மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய இடங்களில் இருந்து பங்கேற்கின்றனர். வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும் 10-ஆயிரம் ரூபாய் பரிசும், இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் 7-ஆயிரம் ரூபாய் பரிசும் மூன்றாவது பரிசாக வெங்கள பதக்கம் 5-ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன.
பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள்
“எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி!” என்கின்ற தலைப்பில், மாவட்ட கனிமவள நிதி மற்றும் என்டிபிஎல் நிறுவன சமூகப் பொறுப்பு நிதி ஆகியவற்றிலிருந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் (சிவந்தாகுளம் மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்படவிருக்கும் கூடுதல் கட்டிடங்களுக்கு) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டினார்.













