LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜி-20 மாநாடு: டில்லி சென்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அதிபர் திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார்.
ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு டில்லியில் தொடங்கியது. மாநாடு இன்று டில்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டில்லிக்கு வருகை தந்துள்ளனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டில்லிக்கு வந்துள்ளதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அதிபர் திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார். அதிபர் அளிக்கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து அதிபர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.