“மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி? – பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி
Share
“அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னையில், கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டில்லி சென்றார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அ.தி.மு.க.,- பா.ஜ. கூட்டணி நீடிக்கும் என்றும், அதற்காக தான் பேச்சுவார்த்தை நடக்கிறது எனவும் பா.ஜ. துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார்.










