LOADING

Type to search

இலங்கை அரசியல்

“தியாகி திலீபன் ஒரு ‘புலி’ என்று தெரிந்துகொண்டும் சிலை வைக்க எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள்?”

Share

யாழ்ப்பாணம் மாநகர முதல்வரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய 2 மணி நேர விசாரணையின் போது கேள்வி

ந.லோகதயாளன்.

தியாகி திலீபன் புலி என்றும் தெரிந்துகொண்டா சிலை வைக்க அனுமதி வழங்கினிர்கள் என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் திருமதி வி்மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது வினாக்களைத் தொடுத்தனர்.

20ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் மாநகர சபை அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது. இதன்போதே குறித்த விடயமும் வினாவப்பட்டுள்ளது.

இதன்போது தியாகி திலீபனின் சிலை வைக்க அனுமதி , சிலை செய்தமை மற்றும் செய்த இடங்களுடன் சபை அனுமதி வழங்கியபோது சபையில் பிரசன்டமாகி இருந்த உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களும் அவரிடன் கேட்டடறியப்பட்டுள்ளன.

இதேபோன்று மேலும. பல வினாக்கள் தொடுக்கப்பட்டு அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் தரப்பில் 4 பொலிஸார் இந்த விசாரணையில் பங்குகொண்டிருந்ததாக தெரியவருகின்றது.