தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி செய்வதாக வைகோ கூறினார்
Share
தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி செய்வதாக வைகோ கூறினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “வைகோ இன் பார்லிமெண்ட்” ( என்ற நூல் மறுவெளியிட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கவிக்கடல் கண்ணதாசன் எனும் தலைப்பில் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; என் வீட்டில் அண்ணா நீங்கலாக அனைத்து தலைவர்களும் சாப்பிட்டுள்ளார்கள். காமராசர், கக்கன், முத்துராமலிங்க தேவர், உட்பட அனைவரும் என் வீட்டில் என் தாய் செய்த சமையலை சாப்பிட்டுள்ளார்கள். கருணாநிதி காலை வந்து வீட்டில் சாப்பிட்டு ஓய்வு எடுத்துவிட்டு மாலை சென்றார். விஎஸ் பாபு இறுதி ஊர்வலத்தின் போது முதலமைச்சர் விஜய் அவர்களுடன் நடந்தேன். “உங்களால் நடக்க முடியுமா சார்” என விஜய் என்னிடம் கேட்டார். “இன்னும் 30 கிமீ கூட நடப்பேன்” என சொன்னேன். அப்போது பின்னால் இருந்து ஒருவர் என்னை தடுத்தார். அவர் அமைச்சர் என்றோ யார் என்றோ எனக்கு தெரியாது. எல்லா அமைச்சரையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்னை தடுத்தவரை நோக்கி “உன் வேலையை பார்” என பதில் தெரிவித்துவிட்டேன். விஜய்யுடன் இறுதி ஊர்வலத்தில் 12 கிமீ தொலைவுக்கு நடந்ததை செய்தி போடாத ஊடகங்கள், அமைச்சரிடம் சண்டை போட்டார் வைகோ என செய்தி போடுகிறார்கள். வைகோ இன் பார்லிமெண்ட் ஆங்கில பிரதி வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அழைத்தேன். “என்னை விட்டுவிடுங்கள் என்னால் அங்கு வந்து பேச முடியாது” என விஜய் சொல்லிவிட்டார். “வைகோ இன் பார்லிமெண்ட் தமிழ் பிரதி வெளியிட்டுக்காவது வருவீர்களா” என விஜய்யிடம் கேட்டேன். “நிச்சயம் வருகிறேன்” என சொன்னார். தவெக ஆட்சி அமைந்ததும் நமக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மாமூல் வராததால் சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட என்னால் சொல்ல முடியும். ஆனால் அதை சொல்ல நான் விரும்பவில்லை. அது ஒரு போதும் நடக்காது” என்றார்













