LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுரை செக்கானூரணி காவல் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்

Share

மதுரை செக்கானூரணி காவல் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது. புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ.3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?

பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.