LOADING

Type to search

சினிமா

ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்திற்கு ‘யூஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளது

Share

வெங்கட் இயக்த்தில் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ‘யூ/ஏ  சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஆழமான அன்பு, தியாகம் மற்றும் குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்வுபூர்வமாகப் பேசுகிறது. இப்படத்தில் ஜீவா லோரி ஓட்டுநராகவும், அவருக்கு ஜோடியாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை ரஜிஷா விஜயன் அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாஸ்டர் கேசவ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் பிரதாப்பின் ‘சிக்னல் அட் 11:30’… இமானின் உருக்கமான ‘போக போக போகாதே’ வீடியோ பாடல் வெளியானது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ‘தங்கப்புள்ள’ மற்றும் ‘சொக்க வச்சாளே’ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘யூ/ஏ 13+’ சான்றிதழ் அளித்துள்ளது.