LOADING

Type to search

உலக அரசியல்

‘சுவிட்சர்லாந்து உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வடகொரியா அதிபரின் சகோதரி எச்சரித்துள்ளார்

Share

‘சுவிட்சர்லாந்து உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வடகொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். ரஷியா-உக்ரைன் போரில் ரஷியாவுக்கு வடகொரியா தொடர்ந்து ராணுவ உதவி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் இருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்று, அவர்களுக்கு ராணுவப் பயிற்சி மற்றும் மூளைச்சலவை செய்வதாகக் கூறி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரான வோன்சானில் உள்ள ‘சோங்டோவோன் சர்வதேச சிறுவர் முகாம்’ மீது சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் பொருளாதாரத் தடை விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அந்நாட்டின் முக்கிய வெளியுறவு அதிகாரியுமான கிம் யோ ஜாங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிட்சர்லாந்தின் நடவடிக்கை வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரான வெளிப்படையான விரோத செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நம்பகத்தன்மையற்ற சுவிட்சர்லாந்துடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும், கடந்த மாதம் தலைநகர் பியாங்யாங்கில் திறக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மூட நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.