நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 13 வீரர்கள் மரணமடைந்தனர்
Share
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் மரணமடைந்தனர். நைஜர் நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ராணுவ சதியால் அரசு கவிழ்க்கப்பட்டது. இதன்பின்னர் உள்நாட்டு குழப்பம் தீவிரமடைந்தது. நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் மேற்கே, சனம் நகரில் தில்லாபெரி பகுதியில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், அந்நாட்டின் தேசிய காவல் படையை சேர்ந்த, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 13 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இதுபற்றி நைஜர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலை நடத்தியவர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டு உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கும்பலாக வந்து இந்த தாக்குதலை நடத்தினர். அவர்களை வீரர்கள் பின்தொடர்ந்து சென்று தாக்கினர். வீரர்களில் பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.













