LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

Share

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா வேன் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கற்பகவள்ளி, அவரது கணவர் செல்வம், 2 மகள்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் இருந்து கந்தர்பால் மாவட்டத்தின் காங்கன் பகுதியை நோக்கி சுற்றுலா வேன் ஒன்றில் 8 பேர் சென்றுள்ளனர். அவர்கள் பயணம் செய்த கார் ககன்கீர் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிந்த் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பிற மீட்பு படையினருடன் சேர்ந்து, காவல்துறை சம்பவ பகுதிக்கு சென்றனர்.  இதில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  2 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கற்பகவள்ளி, அவரது கணவர் செல்வம் மற்றும் 2 மகள்கள் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். விபத்து குறித்து அறிந்த கற்பகவள்ளியின் உறவினர்கள் டில்லி விரைந்தனர்.